தமிழகம் சினிமா

என்ன பண்றது இதுதா வழி நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சிற்கு நடிகர் ராதாரவி வருத்தம்.!

Summary:

ratharavi speech dissappointed- nayanthara- vignesh sivan

நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று  நடை பெற்றது. அதில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசினார். 

அப்போது பேசிய அவர்: "நயன்தாரா நல்ல நடிகை. இவ்ளோ நாள் தம் கற்றதே பெரிய விஷயம். அவங்களை பற்றி வராத (தப்பான) செய்தியெல்லாம் இல்லை. அதையும் தாண்டி நிக்கிறாங்க. தமிழ்நாட்டு மக்கள் எல்லாத்தையும் 4 நாளுக்கு தான் ஞாபகம் வெச்சுப்பாங்க. அப்புறம் விட்ருவாங்க. அப்போலாம் கடவுளாக நடிக்க கே.ஆர்.விஜயா போன்றவர்களை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேணும்னாலும் நடிக்கலாம் என்று பல கருத்துக்களை தெரிவித்தார்.

இவ்வாறு நிகழ்ச்சியில் பேசிய அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் ராதாரவிக்கு எதிரான தனது கருத்துக்களை டுவிட்டரில் வெளியிட்டார். அதனை தொடர்ந்து நடிகை ராதிகா, நடிகர் விஷால் உள்ளிட்ட பல தரப்பினரும் அவருக்கு எதிரான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இதனை தொடர்ந்து நடிகர் ராதாரவி திமுகவில் வகித்த முக்கிய பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், என்னுடைய கருத்து பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ராதாரவி கூறினார். 

மேலும், இந்த விவகாரம் குறித்து திமுக தலைமை என்னிடம் விளக்கம் கேட்டால் கொடுக்க தயார். மீண்டும் திமுகவில் இணைவதற்கு வாய்ப்பு இருந்தால் இணையவும் தயார் என்று தெரிவித்துள்ளார்.


Advertisement