இனி அதெல்லாம் செய்யணும்! செம ஹேப்பியில் நடிகை ராஷ்மிகா வெளியிட்ட பதிவு! இதான் விஷயமா??

இனி அதெல்லாம் செய்யணும்! செம ஹேப்பியில் நடிகை ராஷ்மிகா வெளியிட்ட பதிவு! இதான் விஷயமா??


Rashmika tweet about act with vijay

நடிகர் விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.  அவர் இளைஞர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக கொடிகட்டி பறக்கிறார். ராஷ்மிகா தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்திருந்தார்.

பின்னர் பாலிவுட்டிலும் களமிறங்கி ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான புஷ்பா படத்திலும் ஹீரோயினாக நடித்தார். அதனைத் தொடர்ந்து அவர் தற்போது தளபதி விஜய்யின் 66வது படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய்யின் தீவிர ரசிகையான ராஷ்மிகா அவருக்கே ஜோடியாக நடிப்பதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாப்பியாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், இப்போது நான் வேறு மாதிரி உணர்கிறேன். நான் சாரை பல வருடங்களாகப் பார்த்துக் கொண்டிருந்தேன், இப்போது நான் செய்ய விரும்புவதை எல்லாம் செய்ய வேண்டும். அவருடன் நடிக்க வேண்டும், நடனமாட வேண்டும், அவருடன் பேச வேண்டும் என்று நான் நினைத்த அனைத்தையும் இப்போது செய்ய விரும்புகிறேன். இது முழுமையான மகிழ்ச்சி என உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார்.