மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ரா மந்தனா.. என்ன காரணம் தெரியுமா.?
கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் 2016ம் ஆண்டு "க்ரிக் பார்ட்டி" என்ற கன்னட திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். மேலும் 2018ம் ஆண்டு "சலோ" என்ற திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
தொடர்ந்து தெலுங்கில் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த "கீதா கோவிந்தம்" என்ற திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகையாகவும், நேஷனல் கிரஷாகவும் மாறினார். மேலும் இவர் தமிழில் "வாரிசு" படத்தில் விஜயுடன் நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து இவர் அல்லு அர்ஜூனுடன் தெலுங்கில் நடித்த "புஷ்பா" திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது "புஷ்பா-2" படத்திலும் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் "அனிமல்" மற்றும் "ரெயின்போ" ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஷ்மிகா, "நாம் உண்ணும் அரிசியில் நமது பெயர் எழுதியிருக்கும் என்று கூறுவார்கள். அதுபோலவே நடிகர்களின் பெயர் எழுதியிருந்தால் தான் அந்தக் கதாப்பாத்திரம் எங்களுக்கு கிடைக்கும். அதனாலேயே தொடர்ந்து படங்களில் நடிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.