சினிமா

அடஅட.. பிறந்தநாளன்று நடிகை ராஷி கண்ணா செய்த காரியத்தை பார்த்தீங்களா! தீயாய் பரவும் வீடியோ!!

Summary:

அட.. பிறந்தநாளன்று நடிகை ராஷி கண்ணா செய்த காரியத்தை பார்த்தீங்களா! தீயாய் பரவும் புகைப்படம்!!

ஹிந்தியில் 2013-ம் ஆண்டு வெளிவந்த ‘மெட்ராஸ் கபே’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். பின்னர் தமிழ் சினிமாவில் கடந்த 2018ம் ஆண்டு விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் காலடி எடுத்து வைத்தார்.

அதனை தொடர்ந்து நடிகை ராஷிகண்ணா ஜெயம் ரவியுடன் இணைந்து அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சங்கத்தமிழன் மற்றும் அண்மையில் வெளிவந்த சுந்தர்.சியின் அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார். இந்த நிலையில் நடிகை ராஷி கண்ணா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் அவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு, அதனைக் கொண்டாடும் விதமாக அழகிய மரக்கன்றுகளை நட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவை அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.


Advertisement