
வளர்ந்து வரும் நாயகியான ராஷி கண்ணா, அடுத்ததாக விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து அடங்க மறு மற்றும் விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு வளர்ந்துவரும் நாயகியாக உள்ள நடிகை ராஷி கண்ணா, அடுத்ததாக நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது சமீப காலமாக விக்ரம் ஆக்சன் இயக்குனர் ஹரியுடன் கூட்டணியில் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் அடுத்த கட்டமாக அப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை.
Advertisement
Advertisement