விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் நாயகி இவரா.? செம உற்சாகத்தில் ரசிகர்கள்..!

விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் நாயகி இவரா.? செம உற்சாகத்தில் ரசிகர்கள்..!Rashika mandana joins vijay 65

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். விஜய் - விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து நடித்திருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மாஸ்டர் படத்திற்கு அடுத்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதல் முறையாக ஒரு பெண் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிக்கா மந்தனா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Thalapathi 65

மாஸ்டர் படத்திலையே ரஷ்மிக்காவை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்ததாகவும், ஆனால், நடிகைக்கு கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவருக்கு பதில் மாளவிகா மோகனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தளபதி 65 படத்தில் ரஷ்மிக்காவை கட்டாயம் நடிக்கவைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருவதாக கூறப்படுகிறது.