அந்த நிகழ்ச்சியால் நான் ரொம்ப பாதிக்கப்பட்டேன்! அட.. நடிகை ரம்யா பாண்டியன் என்ன இப்படி சொல்லிட்டாரே! ஷாக்கான ரசிகர்கள்!!

அந்த நிகழ்ச்சியால் நான் ரொம்ப பாதிக்கப்பட்டேன்! அட.. நடிகை ரம்யா பாண்டியன் என்ன இப்படி சொல்லிட்டாரே! ஷாக்கான ரசிகர்கள்!!ramya pandian talk about bigboss shiw

தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து அவர் ஆண்தேவதை, ஜோக்கர் என சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சில போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து ரம்யா பாண்டியன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஷோவில் கலந்துகொண்டு தனது க்யூட்டான சிரிப்பால், சமையல் திறமையால் ரசிகர்கள் அனைவரையும் பெருமளவில் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில்  கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியில் அவர் பலரால் பாராட்டப்பட்டாலும் விமர்சனமும் செய்யப்பட்டார்.

அண்மையில், இவர் நடித்திருந்த ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியானது. இந்நிலையில் பேட்டியில் பேசிய அவரிடம் குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த கேள்வி எழுப்பியபோது, அவர், “பட வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஆனால் அந்த நிகழ்ச்சியால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டேன். பிக்பாஸை விட குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் சிறந்தது. எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி  காமெடியுடன் ஜாலியாக செல்லும். ரசிகர்களும் தங்களின் வெறுப்பை காட்ட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.