ஜன்னல் வச்ச ஜாக்கெட், மயக்கும் பார்வையில் ரசிகர்களை கிறங்கடித்த ரம்யா பாண்டியன்! வைரலாகும் வேற லெவல் புகைப்படங்கள்!!

ஜன்னல் வச்ச ஜாக்கெட், மயக்கும் பார்வையில் ரசிகர்களை கிறங்கடித்த ரம்யா பாண்டியன்! வைரலாகும் வேற லெவல் புகைப்படங்கள்!!


ramya-pandian-latest-photoshoot-viral-7shzg5

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதனை தொடர்ந்து அவர் ஆண் தேவதை படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பை பெற்றார். பின்னர் சரியான பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் ரம்யா பாண்டியன் மொட்டைமாடியில் புடவையில் கவர்ச்சி போட்டோ ஷூட் செய்திருந்தார். அது வைரலாகி அவர் படத்தில் நடித்ததை விட ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். 

அதனைத் தொடர்ந்து ரம்யா பாண்டியன் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அவர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.  பின்னர் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு, நிகழ்ச்சியின் இறுதி வரை சென்றார். மேலும் அதன் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது. அதுமட்டுமின்றி தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் தேடி வருகிறது.

இந்த நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் ரம்யா பாண்டியன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜன்னல் வச்ச ஜாக்கெட்டில் இடுப்பழகை காட்டி போட்டோஷூட் நடத்தியுள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.