சினிமா

அடேங்கப்பா! பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பார்த்தீர்களா! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

Summary:

நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் அதன்பிறகு ஆண் தேவதை படம் மூலம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி தொடர் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.

ஆனாலும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் எதுவும் அமையாத நிலையில் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை முன்னேறினார். மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

 இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியன் நடிகர் சூர்யா தயாரிப்பில், புதுமுக இயக்குனர் அரசில் மூர்த்தி இயக்கும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரம்யா பாண்டியன் தனது சமூக வலைத்தளபக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.


Advertisement