"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
பிரபல தமிழ் சீரியல் நடிகருக்கு 2-வது முறை திருமணம்.. இந்த சேனல் தலைமையிலா?..! குவியும் வாழ்த்துகள்..!!
பிரபல சன்டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நெடுந்தொடர் நாதஸ்வரம். இத்தொடரில் நடித்து பிரபலமடைந்தவர் முனீஸ் ராஜா. இவர் ராஜ்கிரனின் வளர்ப்பு மகளான ஜீனத் பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இவர்களது திருமணத்திற்கு ராஜ்கிரன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அத்துடன் இதுவரையிலும் தனது வளர்ப்பு மகள் எனக் கூறாமலிருந்த ராஜ்கிரன், இவர்களின் திருமணத்திற்கு பின்னர் ஜீனத் பிரியா எனது வளர்ப்பு மகள் என்று முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இதனை மறுத்து முனீஸ் ராஜும் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், ஜீனத் பிரியா ராஜ்கிரண் அவர்களின் மகள்தான். அவர் கோபத்தில் அப்படி பதிவிட்டிருக்கிறார் என்றும், ஊர் முன்னிலையில் திருமணம் செய்ய ஆசைப்பட்டு அது நடக்காமல் போனதாகவும் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முனீஸ் ராஜா - ஜீனத் பிரியா தம்பதியினருக்கு அங்கேயே திருமணம் நடத்தப்பட்டது. இந்த திருமணத்தில் சீரியல் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை மனப்பூர்வமாக தெரிவித்திருந்தனர்.