சினிமா

ரஜினி, கமலுக்கு முன்னரே முதன்முதலாக 1 கோடியில் சம்பளம் வாங்கிய மாஸ் நடிகர்! யாருனு பார்த்தீர்களா!

Summary:

Rajkiran got 1 crore salary first

தமிழ் சினிமாவில் 80,90களில் முன்னணி நடிகர்களாக கொடிகட்டிப் பறந்தவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல். இருவரும் ஏராளமான பல வெற்றிப்படங்களில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளனர். மேலும் தற்போதும் அவர்களது இடத்தை விட்டுக் கொடுக்காமல் உச்சநட்சத்திரமாகவே கொடிகட்டி பறக்கின்றனர். மேலும், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இவர்களுக்கு முன்பே முதன்முறையாக கோடிகளில் சம்பளம் வாங்கியது நடிகர் ராஜ்கிரண்தானாம். சினிமா வினியோகஸ்தராக வாழ்க்கையை தொடங்கிய ராஜ்கிரண், ராசாவே உன்னை நம்பி, என்னபெத்த ராசா போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.பின்னர் கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவான என் ராசாவின் மனசிலே என்ற படத்தின்  மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் டவுசர் தெரிய வேட்டியை ஏத்தி கட்டி தொடையை தட்டி வந்தாலே தியேட்டரே சும்மா அதிருமாம்.

இவர் 1996 ஆம் ஆண்டு வனிதா விஜயகுமாருடன் இணைந்து நடித்த மாணிக்கம் என்ற படத்திற்காகதான் ஒரு கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ளார். மேலும் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ராஜ்கிரண் கோடிகளில்தான்  சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.


Advertisement