உருவாகிறது சம்சாரம் அது மின்சாரம் 2 ! விசுவின் கேரக்டரில் நடிக்கபோவது இவரா? வெளியான சூப்பர் தகவல்!

விசு இயக்கி நடித்த சம்சாரம் அது மின்சாரம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. அதில் விசுவாக நடிகர் ராஜ்கிரண் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


rajkiran-going-to-act-in-samsaram-adu-minsaram-movie

தமிழில் 1986ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்த திரைப்படம் சம்சாரம் அது மின்சாரம். இதனை விசு இயக்கி நடித்துள்ளார். மேலும் அவருடன் அப்படத்தில் மனோரமா, கமலா காமேஷ், ரகுவரன், லட்சுமி, சந்திரசேகர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

இவ்வாறு ரசிகர்களால் பெருமளவில் கொண்டாடப்பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்கும் ஆர்வத்தில் விசு கதை, வசனம் ஆகியவற்றை எழுதி வைத்திருந்துள்ளார். ஆனால் இதற்கிடையில் அவரது உடல்நிலை   மோசமானதால் அவரால் படத்தை உருவாக்க முடியவில்லை.

visu

இந்த நிலையில் தற்போது அவரது மறைவிற்குப் பின்னர் அரசன் பிக்சர்ஸ் சார்பில் ராஜா தயாரிப்பில் சம்சாரம் அது மின்சாரம் 2 உருவாகவுள்ளது. இதனை விசுவின் உதவி இயக்குனர் வி.எல்.பாஸ்கர் ராஜ் இயக்குகிறார். மேலும் ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைக்கவுள்ளார்.

சம்சாரம் அது மின்சாரம் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரமான விசு கேரக்டரில் நடிக்க நடிகர் ராஜ்கிரணிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் மற்ற நடிகர்,நடிகைகளுக்கான தேர்வும் நடைபெற்று வருகிறது.