சினிமா

இந்த வதந்திகளை நம்பாதீங்க! என்னை பிடிக்காதவங்க செய்த வேலை இது! கோபத்தின் உச்சத்தில் நடிகர் ராஜ்கிரண்!

Summary:

நடிகர் ராஜ்கிரண் உடல்நிலை சரியில்லை, கவலைக்கிடமாக இருக்கிறார் என வதந்திகள் பரவிய நிலையில் அதுகுறித்து நடிகர் ராஜ்கிரன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறந்தவர் ராஜ்கிரண். இவரது படங்களுகெனவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் வேட்டியை மடித்துக்கட்டி தொடை தெரிய, அவர் போடும் சண்டைக் காட்சிகள் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டது.

மேலும் நடிகர் ராஜ்கிரண் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் அசத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ராஜ்கிரண் உடல்நிலை மோசமாகி, மருத்துவமனையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. 

அதனைத்தொடர்ந்து இதுகுறித்து நடிகர் ராஜ்கிரண், என்னைக் குறித்து அடிக்கடி இதுபோன்ற வதந்திகள் பரவி வருகிறது. இது என்னை பிடிக்காதவர்கள் திட்டமிட்டு செய்த வேலை. நான் நன்றாக, நல்ல உடல்நலத்துடன் உள்ளேன். என் மீது அதிக அளவு அன்பு கொண்ட ரசிகர்கள் இதுபோன்ற வதந்தியை நம்பவேண்டாம்.

மேலும் நான் இப்போது குபேரன் படத்தை வாங்கி அதனை ரிலீஸ் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறேன். இந்தப் படத்தில் நானும், மம்முட்டியும் இணைந்து நடித்துள்ளோம். இந்தப்படம் என் ரசிகர்களுக்கு கண்டிப்பாக மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.


Advertisement