சினிமா

தளபதியின் சாதனையை தரைமட்டமாக்கிய 2.0! சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்!

Summary:

Rajini's 2.0 movie beat sarkar

இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில், மூன்றாவது முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2.0 திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்திய சினிமாவின் அடுத்த கட்ட படம் என்று அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமிஜாக்சன், ரியாஸ் கான் என பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். ரூபாய் 545 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த பிரமாண்ட படம்தான் தமிழ் சினிமாவில் அதிக செலவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம். லைக்கா நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளது.

2.0 க்கான பட முடிவு
 
இந்நிலையில் சென்னையில் இந்த படம் புதிய சாதனை ஒன்றை படைத்துளது. இதுவரை வெளியான தமிழ் படங்களிலேயே முதல் நாளில் சென்னையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் தான் இந்த சாதனையை தக்க வைத்திருந்தது.

தொடர்புடைய படம்

விஜய்யின் சர்கார் திரைப்படம் வெளியான முதல் நாளில் சென்னையில் மட்டும் 2.37 கோடியை வசூல் செய்திருந்தது. தற்போது ரஜினியின் 2.0 திரைப்படம் சர்க்கார் சாதனையை முறியடித்துள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2.64 கோடி வசூல் செய்துள்ளது இந்த படம்.

1. 2.0 - 2.64 கோடி
2. சர்கார் - 2.37 கோடி
3. காலா - 1.76 கோடி
4. மெர்சல் - 1.52 கோடி
5. விவேகம் - 1.12 கோடி


Advertisement