வாவ்.. அருமையான படம்! பிரம்மித்துபோன சூப்பர் ஸ்டார்.! என்ன படம்னு பார்த்தீங்களா

வாவ்.. அருமையான படம்! பிரம்மித்துபோன சூப்பர் ஸ்டார்.! என்ன படம்னு பார்த்தீங்களா



rajinikanth-wish-83-movie

1983ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி உலக்கோப்பை போட்டிகளில் அரையிறுதிக்கு கூட முன்னேறாத  இந்திய அணி முதன்முறையாக இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது. அத்தகைய போட்டிகளில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி மிகவும் அபாராமாக விளையாடி வெற்றியை கைப்பற்றியது. 

அந்த சாதனையை நினைவுக்கூரும் வகையில் கபீர் கான் 83 என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் கபில்தேவ்வாக ரன்வீர் சிங், தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக நடிகர் ஜீவா, மான் சிங் கதாபாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் தீபிகா படுகோனேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 24ஆம் தேதி வெளியானது. இதன் தமிழ் மொழி வெளியீட்டை கமலின் ராஜ்கமல் நிறுவனம் கைப்பற்றி படத்தை வெளியிட்டது. இப்படத்தை கண்ட நடிகர் ரஜினிகாந்த், "வாவ் என்னவொரு அருமையான படம், பிரமிக்கதக்க படம். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.