90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
ரீரிலீஸ் செய்யப்பட்ட முத்து படத்தின் வசூல் தெரியுமா?.. விபரம் இதோ.!

கடந்த 1995ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், கவிதாலயா பிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் ரஜினிகாந்த், சரத் பாபு, ராதா ரவி, மீனா, பொன்னம்பலம், செந்தில், வடிவேலு, ஜெயபாரதி, பாண்டு, ரகுவரன் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் முத்து.
இப்படம் தமிழ் திரையுலகை சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் கொண்டு சேர்த்தது. இப்படத்திற்கு பின்னரே ரஜினிக்கு கடல்கடந்த ரசிகர்களும் கிடைத்தனர். அன்றைய நாட்களிலேயே பல கோடிகளை படம் குவிந்திருந்தது. இந்நிலையில், படம் கடந்த டிசம்பர் 08ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் ரூ.23.5 இலட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.