Video : குஷ்பூவின் மகள் திருமணத்தில் நடிகை திரிஷா! வேறு யாரெல்லாம் வந்திருக்காங்க தெரியுமா..?
முதற்கட்டமாக வெளிநாடுகளில் உள்ள ரசிகர்மன்றத்தினருக்கு கட்சியில் முக்கிய பதவி - நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு .
நடிகர் ரஜினிகாந்த்தை பல ஆண்டுகளாகவே அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்து வந்தனர் . அதை மனதில் கொண்டு பல வழிகளில் ஆராய்ந்து சமீபத்தில் தான் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் . ஆனால், இன்னும் அவர் கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை. அதை, வரும் அக்டோபரில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார் .
இதனிடையே, அவர் தற்சமயம் படங்களில் நடிப்பதிலையே கவனத்தை செலுத்துகிறார் . இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் ரஜினி ரசிகர் மன்றங்களுக்கு நிர்வாகிகளை நியமித்துவருகிறார். சிங்கப்பூர் நாட்டுக்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தற்போது நியமித்து உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் பரவலாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பெரும்பான்மையாக உள்ளார்கள். அங்கு அங்கு ரசிகர் மன்றங்களும் உள்ளது.

சிங்கப்பூருக்கான ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக நடிகை சுகன்யா ராஜாவை நியமித்து ரஜினி நியமித்துள்ளார். குழந்தைப் பருவத்திலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகையாக இருந்துவந்த சுகன்யாவிற்கு ‘காலா’ திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்மூலம் சுகன்யாவிற்கு ரஜினியிடம் நல்ல அறிமுகமும் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவருக்கு சிங்கப்பூர் செயலாளர் பதவி வழங்கியுள்ளார்.