"வெள்ளையான மணப்பெண் தான் வேண்டும் என்று அடம்பிடித்த ரஜினி!" பிரபலம் சொன்ன தகவல்!



Rajinikandh like to marry a white girl

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பெங்காலி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 169 படங்களை நடித்துள்ளார் ரஜினிகாந்த். கே. பாலசந்தர் இயக்கிய "அபூர்வ ராகங்கள்" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டு வருகிறார்.

rajini

ஆசியாவிலேயே ஜாக்கி சானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினி தான். இவர்1982ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி லதா என்பவரை திருப்பதியில் திருமணம் செய்துகொண்டார். நடிகர் y.g மகேந்திரனின் மனைவியின் சகோதரி தான் லதா என்பது பலரும் அறிந்ததே.

இந்நிலையில் பிரபல மூத்த அரசியல் விமர்சகரான டாக்டர் காந்தராஜ் ஆகாயம் தமிழ் என்ற யூட்யூப் சேனலுக்கு  அளித்த பேட்டியில், லதா- ரஜினிகாந்த் திருமணம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது, " ரஜினி y.g . மகேந்திரனின் மனைவி சுதாவை பார்த்த பிறகு அவரிடம் தன் எண்ணங்களை கூறியுள்ளார்.

rajini

அதன்படி y .g மகேந்திரனிடம், "சுதாவுக்கு அக்கா இல்லையா? பொண்ணு வெள்ளையா அழகா இருக்கு. நான் கருப்பாக இருப்பதால் பெண் வெள்ளையாக தான் வேண்டும்" என்று நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பேசினார். அதன்பின்னரே லதா-ரஜினி திருமணம் உறுதி செய்யப்பட்டு நடந்தது" என்று கூறியுள்ளார்.