சினிமா

ரஜினியின் தளபதி படத்தில், முதலில் நடக்கவிருந்தது இந்த நடிகரா? அதுவும் இந்த கதாபாத்திரத்தில்.! வெளியான சீக்ரெட் தகவல்!

Summary:

ரஜினியின் தளபதி படத்தில் அரவிந்த்சாமி கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் ஜெயராம் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சரித்திர சாதனை படைத்த திரைப்படம் தளபதி. இத்திரைப்படத்தில் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், மம்முட்டி மற்றும் அரவிந்த் சாமி ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு தங்களது திறமைகளை கொட்டியுள்ளனர்.

தளபதி திரைப்படம் வெளியாகி செம ஹிட்டானது . மேலும் வசூல் சாதனையும் படைத்தது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்ததாக தற்போது தகவல்கள் பரவி வருகிறது.

அதாவது தளபதி படத்தில் நடிகர் அரவிந்த்சாமி ரஜினிக்கு தம்பியாக, கலெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் ஜெயராம்தான் நடிக்க தேர்வு செய்யப்பட்டிருந்ததாகவும் , படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அரவிந்த்சாமியின் புகைப்படத்தை பார்த்து இவர் கலெக்டர் கதாபாத்திரத்திற்கு நன்றாக இருப்பார் என கூறியதால் அரவிந்த் சாமியை நடிக்க வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.


Advertisement