சினிமா

ரஜினி மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்; எல்லாம் நல்லா தான் இருக்கு, ஆனா..!

Summary:

rajini daughter prewedding reception photos

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. இவர் 2010ல் தொழிலதிபர் அஷ்வினை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் தற்போது சௌந்தர்யா திமுகவின் முன்னாள் எம்எல்ஏ பொன்முடியின் தம்பி தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனை இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். இவர்களது திருமணம் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி  நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சௌந்தர்யா மற்றும் விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இருவீட்டாரது நண்பர்கள் மற்றும் நெருங்கிய சினிமா பிரபலங்கள் மட்டும் பங்கேற்றனர். 

இந்த திருமண வரவேற்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ரஜினி தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்தக் குடும்ப புகைப்படங்களில் தனுஷ் மட்டும் இடம் பெறவில்லை.

தாமதமாக அந்த தனுஷ் சாதாரணமாகவே உடையணிந்து விழாவிற்கு வருகை தந்தார். அப்போது அவர் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தனுஷ் இப்படி தாமதமாக வந்ததற்கும் சாதாரண உடையில் வந்ததற்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை.

 


Advertisement