தனது மகளுக்காக முஸ்லிமாக மாறும் சூப்பர் ஸ்டார் ரஜினி!! வெளியான லேட்டஸ்ட் தகவல்..

தனது மகளுக்காக முஸ்லிமாக மாறும் சூப்பர் ஸ்டார் ரஜினி!! வெளியான லேட்டஸ்ட் தகவல்..


rajini-as-muslim-exclusive-update

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் படம்  ஜெய்லர். இந்தப் படத்தை  நெல்சன்  திலீப் குமார் இயக்கிக் கொண்டிருக்கிறார் 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்  சிவராஜ்குமார் மற்றும்  மலையாளத் திரை உலகின்  முன்னணி நடிகர் மோகன்லால் ஆகியோரும்  நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் கோடை விடுமுறையின் போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


rajini

இதனை அடுத்து சூப்பர் ஸ்டார்  தனது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என்ற திரைப்படத்தில்  முக்கிய தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட  திரைப்படமான இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்தத் திரைப்படத்தைப் பற்றிய சிறப்பு தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் இந்த திரைப்படத்தில் ஒரு இஸ்லாமியராக நடிக்க இருக்கிறார் என்பதுதான்.
rajini
பாட்ஷா படத்திற்குப் பிறகு  சூப்பர் ஸ்டார் ஒரு இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்ஷாவில் மாணிக்கமாக வரும் ரஜினி அவரது நண்பர் அன்வர் பாட்ஷாவின் இறப்பிற்கு பின்  தனது பெயரை மாணிக் பாட்ஷாவாக மாறி பாட்ஷாவாகவே வாழ்ந்திருப்பார். லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக இருந்தாலும் அந்தத் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது.