நடிகர் ரஜினி மற்றும் கமல் திடீர் சந்திப்பு! என்ன காரணம்? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

நடிகர் ரஜினி மற்றும் கமல் திடீர் சந்திப்பு! என்ன காரணம்? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!



rajini-and-kamal-met-in-poyas-garden-house

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடியவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருக்குமே ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.  இந்நிலையில் அரசியலில் களமிறங்கிய உலகநாயகன் கமல் கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் நீதி மையம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தனித்து போட்டியிட்டார். மேலும் தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கமல் தற்போது தமிழகத்தை சீரமைப்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவரைப் போலவே நடிகர் ரஜினியும் கட்சி ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்திருந்த நிலையில் அவரது உடல் நலம் காரணமாக அதனை வாபஸ் பெற்றார்.  இந்த நிலையில் இன்று ரஜினி மற்றும் கமல் இருவரும் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.

rajini

ரஜினி அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவிப்பு வெளியிட்டபோது ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பேன் என கமல் கூறி வந்தார். இந்த நிலையில் 45 நிமிட இந்த சந்திப்பு நட்பு ரீதியாக நலம் விசாரிப்பதற்கானதா?அல்லது அரசியல் சம்பந்தமானதா? என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது.