சினிமா

ராஜா ராணி சீரியல் நடிகை வீட்ல விசேஷம்! காதலர் தினத்தன்று வெளியிட்ட சந்தோசமான செய்தி! குவியும் வாழ்த்துக்கள்!!

Summary:

தெலுங்கு சீரியல்களில்  நடித்ததை தொடர்ந்து, செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலில் நடித்ததன

தெலுங்கு சீரியல்களில்  நடித்ததை தொடர்ந்து, செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. அதனை தொடர்ந்து அவர் சன் டிவி, விஜய் டிவி என பல பிரபல தொலைக்காட்சிகளிலும் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். அதாவது அவர் தங்கம், இளவரசி, பிரிவோம் சந்திப்போம், வாணி ராணி, கல்யாண பரிசு, செம்பருத்தி, அரண்மனைக்கிளி என பல தொடர்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி சீரியலில் வில்லியாக நடித்து பெருமளவில் மிரட்டியுள்ளார். அந்த தொடரில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டது. மேலும் நடிகை ஸ்ரீ தேவி ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதேவி காதலர் தினமான நேற்று முக்கியமான மகிழ்ச்சியான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது திருமணமாகி பல வருடங்கள் ஆனநிலையில், தான் தற்போது கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


Advertisement