சினிமா

அடுத்தவன் காதலிக்கு பொது இடத்தில் முத்தம் கொடுத்த விஜய் டிவி பிரபலம்!

Summary:

Raja rani actor karthi kissed semba in public place

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஓன்று ராஜா ராணி. இதில் ஹீரோவாக குளிர் 100 டிகிரி பட நடிகர் சஞ்சீவ் கார்த்திக் என்ற வேடத்திலும், நாயகியாக ஆலியா மானசா செம்பா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த தொடருக்கு ஏக பட்ட வரவேற்பு உண்டு.

ஆல்யா மானசாவுக்கு ரசிகர்கள் ஏராளம். அதற்கு முக்கிய காரணம், அடிக்கடி அவர் வெளியிட்டு வரும் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் தான். இதற்கு முன்னர் மானஸ் என்பவரைக் காதலித்து வந்த மானசா கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரைப் பிரிந்தார். இதையடுத்து ராஜா ராணி சீரியலில் அவருடன் நடிக்கும் சஞ்சீவ் கார்த்திகை ஆல்யா மானசா காதலித்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இணையதள ஊடகம் ஓன்று நடத்திய விருது வழங்கும் விழாவில் ஆல்யா மானசா-சஞ்சீவ் கார்த்திக் இருவருக்கும் சின்னதிரையின் பிரபல மற்றும் சிறந்த ஜோடிக்கான விருது வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பொது இடத்தில் ஆலியாவிற்கு சஞ்சீவ் முத்தம் கொடுத்த புகைப்படம் வைரலாகிவருகிறது.


Advertisement