"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
உண்மையறிந்து ஆதியை இழுத்துப்போட்டு மிதிக்கும் சரவணன்.. ஐ.பி.எஸ் ட்ரைனிங் செல்வாரா சந்தியா?.. விறுவிறுப்புடன் ராஜாராணி 2 Promo..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்த நெடுந்தொடர் ராஜா ராணி 2. இந்த சீரியல் ஒரு பெண் தனது தாய், தந்தை மற்றும் தனது கனவை நிறைவேற்றும் கதையை மையமாகக் கொண்டது. தொடரின் நாயகி சந்தியா ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு மாமியார் சிவகாமியின் வீட்டிற்குள் நுழைகிறார்.
ஆனால் சிவகாமியோ அதற்கு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சமீபத்தில் தான் அவர் ஐபிஎஸ் நேர்முக தேர்வு மற்றும் தேர்வு எழுதுவதற்கு அனுமதியளித்தார். ஆனால் வழக்கம்போல ஒரு கண்டிஷன் போட்டார். தனது மகனும், சந்தியாவின் கணவருமான சரவணன் சமையல்போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற 5 லட்சம் காணாமல் போன பணத்தை கண்டுபிடித்து தரவேண்டும் என கூறினார்.
மேலும், இந்த சவாலில் நீ ஜெயித்தால் தான், ஐபிஎஸ் ட்ரைனிங் செல்ல முடியும் இல்லையென்றால் செல்லக்கூடாது என்று கூறினார். இதனை கேட்ட சந்தியாவும் சவாலை ஏற்ற நிலையில், பணத்தை திருடியது வீட்டிலிருந்த ஆதிதான் என்று தெரியவந்தது.
இதனால் சந்தியா ஆதியிடம் கேட்கவே அவர் உண்மையை உளறி, எனக்கு திருமணம் நடைபெற வேண்டுமென்றால் நீங்கள் இதை எனது தாயிடம் கூறாமல் இருக்கவேண்டும். தயவு செய்து உதவி செய்யுங்கள் என்று காலில் விழுந்து கதறுகிறார். இதனால் சந்தியா மனம் இறங்கி தனது கனவையும் பொருட்படுத்தாமல், என்னால் உங்கள் சவாலை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
ஆனால் நான் ஐபிஎஸ் ட்ரைனிங் செல்ல வேண்டாம் என மட்டும் கூறாதீர்கள் என்று தனது மாமியார் சிவகாமியிடம் கெஞ்சி கேட்கிறார். அப்போது சரவணன் ஆதியை இழுத்துப்போட்டு மிதித்து, நீதான் பணத்தை திருடியது என ஒற்றுக்கொள் என்று கூறி தனது தாயிடம் இவன் தான் பணத்தை திருடியது என்று கூறுகிறார்.
உண்மையை சொல் இந்த பணத்தை நீ தான் திருடினாயா? என்று சிவகாமி கேட்கவே, ஆமாம் என்று அவர் ஒப்புக்கொள்கிறார். இதனை தொடர்ந்து சவாலில் சந்தியா வெற்றி பெற்றதால், சிவகாமி அவரை ஐபிஎஸ் ட்ரைனிங் அனுப்புவாரா? மாட்டாரா? என்ற கேள்வியோடு இந்த வார ப்ரோமோ முடிவடைந்துள்ளது.