கண்ட கழிசடைகளும் பேசினால்.. இஸ்லாமியர்களை குறித்து ராஜ்கிரண்னின் சர்ச்சையான பதிவு.?

கண்ட கழிசடைகளும் பேசினால்.. இஸ்லாமியர்களை குறித்து ராஜ்கிரண்னின் சர்ச்சையான பதிவு.?


raj-kiran-facebook-post-viral

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ராஜ்கிரன். தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகி வில்லன் நடிகராக பிரபலமானவர். மேலும் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகராகவர். தமிழ் சினிமாவில் இவரது நடிப்பிற்கென்று தனி ரசிகர் கூட்டங்கள் இருந்து வந்தன.

Rajkiran

தற்போது ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து வரும் ராஜ்கிரன் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தமிழ்நாட்டில் நடக்கும் சர்ச்சைகள் குறித்து பதிவிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்து வருகிறார்.

இது போன்ற நிலையில், ராஜ்கிரன் தனது முகநூல் பக்கத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பதிவு ஒன்றை எழுதி இருக்கிறார். அப்படியில், "இஸ்லாமியர்களுக்கு எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், அக்கிரமங்களுக்கு உள்ளானாலும், அவர்கள் அனைத்தையும் சகித்துக்கொண்டு தங்களால் முடிந்த உதவிகளை பிற மதத்தினருக்கு செய்து வருகின்றனர்.

Rajkiran

அவர்கள் அவ்வாறு செய்வது பயந்தோ அல்லது அல்லது கோழித்தனமோ, இயலாமையோ இல்லை. நபிகள் நாயகத்தின் வழியில் நடக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் பொறுமை காத்து வருகின்றனர். கண்ட கழிசடைகள் பேசினால் மோசமான விளைவு ஏற்படும்" என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் பற்றி சர்ச்சையான கருத்தை வெளியிட்டார்.