நீச்சல் உடை.. குளியல் வீடியோவை கண்டு ரசிகர் கேட்ட மோசமான கேள்வி! அதற்கு ரைசாவின் பதிலை பார்த்தீர்களா!

நீச்சல் உடை.. குளியல் வீடியோவை கண்டு ரசிகர் கேட்ட மோசமான கேள்வி! அதற்கு ரைசாவின் பதிலை பார்த்தீர்களா!


raiza-answered-to-netisan-who-comment-badly-about-his-s

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் பிரபலமானவர் ரைசா வில்சன்.  மாடலிங் துறையை சேர்ந்த இவர் ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவரை  பெருமளவில் பிரபலமாக வைத்தது பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு ஏராளமான சினிமா வாய்ப்புகள் வரத் துவங்கியது. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது சக போட்டியாளராக இருந்த ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் இளம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து ரைசா தற்போது அலைஸ், காதலிக்க  யாருமில்லை, எஃப் ஐ ஆர், ஹேஷ்டாக் போன்ற படங்களில் பிஸியாக உள்ளார்.

     Raiza

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். இந்த நிலையில் ரைசா அண்மையில்  நீச்சல் உடையில் குளிக்கும்  வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இதனைக்கண்ட நெட்டிசன் ஒருவர் என்ன டார்லிங் ஜட்டியுடன் சுத்திட்டு இருக்கீங்க என விமர்சனம் செய்துள்ளார். அதனைக் கண்ட ரைசா கூலாக, நீச்சல் குளத்திற்கு பிளேசர் மற்றும் பேன்ட் அணிந்து செல்ல வேண்டுமா? தயவு செய்து ஸ்டைலிஸ்ட் ஆகி விடாதீர்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.