சினிமா

உண்மையான ஹீரோ இவர்தான்!! ராகவா லாரன்ஸின் செயலால் மனநெகிழ்ச்சியுடன் குவியும் வாழ்த்து!!

Summary:

ragava lawrance help poor people

தமிழ் சினிமாவில் நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டு விளங்குபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். சமூக நலன்களில் மிகவும் அக்கறை கொண்ட இவர் கஷ்டப்படும் மக்களுக்கு தானாக முன்வந்து பல உதவிகளை செய்து கொண்டிருக்கிறார். மற்றும் மாற்றுத்திறனாளி, திருநங்கையர்கள் என பலருக்கும் பலவகையான உதவியை செய்து வருகிறார்.

இவ்வாறு பல்வேறு பல உயிர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் உண்மையான ஹீரோவான ராகவா லாரன்சை காண சென்னை வந்த குடும்பம் ஒன்று முகவரி இன்றி ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையத்தில் சேர்ந்தவர் குரு லட்சுமி ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவருக்கு அவரதுதந்தை மிகவும் கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் திருமணமான அடுத்த ஆண்டே அவருக்கு சூர்யா என்ற அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர் சில காலங்களுக்கு பிறகு சூர்யா வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டார். அவரால் நடக்க முடியாமல் போனது. பின்னர் சில வருடங்களில் பேசவும் முடியாமல் போனது. அதுமட்டுமின்றி அடிக்கடி அவரது இதயம் படபடவென அடிக்க தொடங்கியது. அவர்கள் பல மருத்துவமனைக்கு சென்ற நிலையிலும் நோய் குணமாகவில்லை. இந்நிலையில் குருலட்சுமியின் கணவர் அவரை விவாகரத்து செய்ய வழக்கு தொடர்ந்தார். 

அதனால் கதிகலங்கிப் போன குருலட்சுமியின் தம்பி வெங்கடேசன் திருமணத்திற்கு ஏஏற்பாடு செய்யப்பட்டநிலையில், அதனை தள்ளி வைத்துவிட்டு நடிகர் ராகவா லாரன்சை பார்த்தால் கண்டிப்பாக உதவி கிடைக்கும் என நம்பி சென்னை வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு சரியான முகவரி கிடைக்காத நிலையில், அவர்கள் ரயில்வே பிளாட்பாரத்திலேயே வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தகவல் அறிந்ததும் நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று காலை முதல் வேலையாக தனது உதவியாளரை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு காரில் அனுப்பி குருலட்சுமியும், வெங்கடேசனையும் சந்தித்து  அழைத்துவர கூறினார். பின்னர் அவர்களை சந்தித்து அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராகவா லாரன்ஸிற்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.


Advertisement