சினிமா

தனது முதல் படத்தின், முதல்நாள் ஷூட்டிங் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை ராதிகா! அப்போ எப்படியிருக்காரு பார்த்தீங்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் ரஜினி,கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுக்கு

தமிழ் சினிமாவில் ரஜினி,கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதிகா. ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்த அவர் தற்போதும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி அவர் சின்னத்திரையிலும் களமிறங்கி சித்தி, அண்ணாமலை, அரசி, வாணி ராணி, சித்தி 2 என பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். எப்பொழுதும் கம்பீரமாக இருக்கும் ராதிகாவிற்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

நடிகை ராதிகா 1978 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம்தான் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் அவருடன் சுதாகர், காந்திமதி, கவுண்டமணி என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் அப்படத்தில் இடம்பெற்ற பூவரசம்பூ பூத்தாச்சு பாடல் செம ஹிட்டானது. இந்த நிலையில் மலரும் நினைவாக நடிகை ராதிகா இப்படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.


Advertisement