அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
80-களில் கலக்கிய நடிகை ராதாவா இது! சிறுவயதில் என்ன ஒரு அழகு - புகைப்படம் உள்ளே
80களில் தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்த முக்கியமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ராதா. அனைத்து பிரபல நடிகர்களுடன் நடித்து தமிழ் மக்களிடம் தங்களின் சிறந்த நடிப்பின் மூலம் பாராட்டுகளை பெற்றவர்கள்.
அம்பிகா மற்றும் ராதா தங்களது சிறந்த நடிப்பினால் கலைமாமணி விருது பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவில் இவர்கள் இருவரும் போட்டி போட்டு நடித்த படங்களும் உண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்ற அனைத்து மொழிகளிலும் நடித்து பாராட்டுக்களைப் பெற்றவர்கள்.

தற்போது ராதா 50 வயதை தாண்டினாலும் இன்னும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே சின்னத்திரையின் மூலம் கவர்ந்து வருகின்றார். மேலும் தனது சொந்த தொழிலை கவனித்து வருவதால் அவ்வளவாக நடிக்க முடியவில்லை என ராதா கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகை ராதாவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிறுவயதில் இவ்வளவு அழகாக இருந்தாரா என கமெண்ட் செய்து வருகின்றனர்.