தனுஷின் ராயன் இசை வெளியீட்டு விழா எப்போது?? ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி!!raayan-audio-launch-date-announced

கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ராயன். தனுஷின் 50வது படமான இதனை அவரே இயக்கி நடித்துள்ளார். ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

ராயன் படத்தில் இணைந்துள்ள நட்சத்திரங்கள் 

 

இந்த படம் வடசென்னையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராயன் திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், காளிதாஸ் சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், அப்டேட்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: "அடங்காத அசுரன் ஆட்டம் ஆரம்பம்"... பட்டையை கிளப்பும் தனுஷின் ராயன் முதல் பாடல்.! வேற லெவல்தான்!!

Raayan

இசை வெளியீட்டு விழா 

 

இந்த படம் ஜூன் 13 ஆம் தேதி திரைக்கு வரஉள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராயன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வரும் ஜூன் 1,  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

இதையும் படிங்க: ராயன் படத்தில் இடம்பெற்றுள்ள 'அடங்காத அசுரன்' பாடல் வெளியீடு; லிங்க் உள்ளே.!