ராயன் படத்தில் இடம்பெற்றுள்ள 'அடங்காத அசுரன்' பாடல் வெளியீடு; லிங்க் உள்ளே.!



Adangaatha Asuran Lyric Video from Raayan Movie 

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் அட்டகாசமாக உருவாகியுள்ள திரைப்படம் ராயன் (Raayan). இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சுந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன், அரவிந்த் ஆகாஷ், ஜெயராம், நந்தா துரைராஜ் உட்பட பலரும் நடித்துள்ளனர். 

ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் திரைப்படம்:

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே எடிட்டிங்கில் தயாராகியுள்ள இப்படம் 13 ஜூன் 2024 அன்று வெளியாகிறது. தனுஷ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் போஸ்டர் தொடர்பான விடியோக்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

அடங்காத அசுரன் பாடல் வெளியீடு:

தனுஷின் 50 வது திரைப்படமான ராயனில் இடம்பெற்ற அடங்காத அசுரன் பாடல் இன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது. அதன்படி, தற்போது பாடல் வெளியாகி இருக்கிறது. இப்பாடல் வரிகளை தனுஷ் எழுத, ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் தனுஷ் பாடி, ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். ஸ்ரீதர் ரமேஷ், யது கிருஷ்ணன், அரவிந்த் கர்ணேஸ்வரன், பிரசன்னா ஆதிசேஷா, செண்பகராஜ், தீபக் ப்ளூ, அக்ஷயா ஷிவ்குமார் ஆகியோரின் பின்னணி குரலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அந்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்: