சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த பிரபல இளம் நடிகை! சோகத்தில் குடும்பத்தினர்.

Puja kujarath


Puja kujarath

மராத்தியை சேர்ந்தவர் இளம் நடிகை பூஜா ஜீன்சர். இவர் மராத்தியில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் திருமணமான பிறகு நடிப்பதை விடுத்து சொந்த ஊருக்கு சென்று செட்டிலாகி விட்டார்.

திருமணத்திற்கு பிறகு கர்ப்பமான பூஜா மஹாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலியில் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது திடீரென பூஜாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

puja

அப்போது அவர் வயிற்றில் இருந்த குழந்தை இறந்து பிறந்துள்ளது. அதுமட்டுமின்றி அவரது உடல் நிலையும் மோசமாகியுள்ளது. உடனே அந்த மருத்துவர்கள் அருகில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். அதனை அடுத்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு நேரம் ஆகியுள்ளது. இதனால் நடிகை பூஜா ஆம்புலன்ஸில் செல்லும் போது பாதி வழியிலேயே உயிரிழந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் மிகு‌ந்த சோகத்தில் இருந்து வருகின்றனர்.