சினிமா

சூர்யாவுக்கு ஜோடியாக அருவா படத்தில் இணையும் முன்னணி நடிகை! யார் அவர் தெரியுமா?

Summary:

Puja joined as aruva movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர்.இவர் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தாலும் சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியது. 

இந்நிலையில் தற்போது  நடிகர் சூர்யா இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் நடிகர் சூர்யாவுக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் துவங்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தால் படப்பிடிப்பு தள்ளிப் போய் உள்ளது. 

இந்நிலையில் தற்போது அருவா படத்தில் ஹுரோயினாக தெலுங்கு முன்னணி நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இவர் இதற்கு முன்பு தமிழில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து முகமுடி படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Advertisement