அச்சச்சோ என்னாச்சு?.. திடீரென மேடையிலேயே கதறியழுத பிரியங்கா..! நடந்தது இதுதானா?..! தீயாய் பரவும் வீடியோ..!!

தமிழ் திரையுலகில் முன்னணி வில்லன் நடிகராக வலம்வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் சமீபகாலமாக அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும், ஏதாவது ஒரு விஷயத்தால் மக்களால் அறியப்பட்டு வருகிறார்.
சமீபத்தில் தேர்தலில் சுயேர்ச்சையாக போட்டியிட்டு படுதோல்வியடைந்த நிலையில், பின்னர் வாழ்ந்து வரும் வீட்டில் பாதி புறம்போக்கு நிலம் என்று புகார் வந்த பிரச்சினையால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடி வருகிறார்.
இதற்கிடையில் ஆனந்த்ராஜ் இயக்கிய கடலை போட ஒரு பொண்ணு வேணும் என்ற படத்தில் மன்சூர் அலிகான் நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.
இந்த நிலையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் வெற்றிபெற்ற ராஜூ தொகுத்து வழங்கும் ராஜூ வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்நிகழ்ச்சியின் ப்ரோமோவில் அனைவரிடமும் கலாட்டா செய்யும் மன்சூர் அலிகான் அப்படி ஒரு ஆட்டம் போட்டுள்ளார். பிரியங்காவுடன் இணைந்து அவர் போட்ட ஆட்டம் அனைவரையும் திணற வைத்துள்ளது. தற்போது இந்த வீடியோ .தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அத்துடன் இந்த வீடியோவில் மன்சூர் அலிகான், பிரியங்காவுடன் சேர்ந்து ஆடும்பொழுது அவர் அம்மாகிட்ட போகணும் என்று கதறியழுவது போல காமெடி செய்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் ஐயோ பிரியங்கா என்னாச்சு என்று கிண்டல் செய்து வருகின்றனர்.