
priyanga wish her husband to birthday
தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மற்றும் கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளினி பிரியங்கா. மேலும் பல சீசன்களை கடந்து செல்லும் இந்த நிகழ்ச்சியை போட்டியாளர்களுக்காக மட்டுமின்றி பிரியங்காவிற்காக பார்ப்பவர்களும் பலர்.
பிரியங்கா எப்பொழுதும் தன்னை தானே கலாய்த்துக் கொள்வார், மேலும் அவரை கலாய்க்குமாறு வேறு யாராவது எதையாவது கூறினாலும் முகம் சுழிக்காமல் சிரித்தே சமாளிப்பார். மேலும் இவரின் சிரிப்புக்கெனவே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.
விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியான பிரியங்கா கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்துகொண்டு வந்தார் .மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரியங்கா தன்னுடன் பணிபுரிந்த பிரவீன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் பிரியங்கா பிறந்தநாள் கொண்டாடும் தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் புருஷா என வாழ்த்துகூறி புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Happpyyy Birthdaaayyy Purushaa ❤️❤️ pic.twitter.com/I2AGw4ahjL
— Priyanka Deshpande (@Priyanka2804) 1 March 2019
Advertisement
Advertisement