நடுரோட்டில் செம ஹேப்பியாக டான்ஸ் போட்ட பிரியங்கா.! அட.. என்ன விஷேசம் பார்த்தீங்களா!!

நடுரோட்டில் செம ஹேப்பியாக டான்ஸ் போட்ட பிரியங்கா.! அட.. என்ன விஷேசம் பார்த்தீங்களா!!



priyanga-dance-in-road-video-viral

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவர்ந்த ஏராளமான சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா. கலகலப்பான இவரது பேச்சு மற்றும் குழந்தைதனமான அவரது சிரிப்புக்கு என்றே ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். மேலும் பிரியங்கா விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும்  கலந்துக்கொண்டு நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இந்நிலையில் தற்போது பிரியங்கா சூப்பர் சிங்கர் மற்றும் உ சொல்றியா உ உம் சொல்றியா போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் பிரியங்கா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி ஆடியோ வெளியீட்டு விழா, ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார்

இதற்கிடையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அவர் தற்போது தனது 31வது பிறந்தநாளை கொண்டாட லண்டனுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் நடுரோட்டில் டான்ஸ் ஆடி தனக்கு தானே வாழ்த்து கூறி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அது வைரலான நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.