உலகம் சினிமா

கொரோனா அசுரதாண்டவம்! அமெரிக்க மாணவர்களின் கல்விக்காக உதவும் பிரபல விஜய் படநடிகை!

Summary:

Priyanga chopra help america student education

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் அங்கு அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. 

 மேலும் அவர்  ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கும் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ப்ரியங்கா சோப்ரா அமெரிக்க நடிகரும், பாப் பாடகருமான நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளையும் ஆட்டிபடைத்து வருகிறது. மேலும் அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் அதிகமாகி கொண்டே செல்கிறது. இந்நிலையில் பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொரோனாவால் தவித்து வரும் மாணவர்களின் கல்விக்கு உதவப் போவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த இக்கட்டான தருணத்தில் அனைவரும் ஒன்றாக தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். இளைஞர்களின் வளர்ச்சியும், கல்வியும் எப்போதும் எனது மனதுக்கு நெருக்கமாக உள்ளது. எனவே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்கும் மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஹெட்போன்கள் வழங்க முடிவு செய்துள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

    


Advertisement