அந்த இடத்தில் டாட்டூ போடசொல்லி டார்ச்சர் பண்ணினாங்க.! பகீர் குற்றச்சாட்டால் பரபரப்பைக் கிளப்பிய பிரியாமணி!!

அந்த இடத்தில் டாட்டூ போடசொல்லி டார்ச்சர் பண்ணினாங்க.! பகீர் குற்றச்சாட்டால் பரபரப்பைக் கிளப்பிய பிரியாமணி!!


priyamani-talk-about-producer-tortures

தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியாமணி. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் இவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்தப் படத்திற்காக அவர் தேசிய விருதும் பெற்றார்.

பிரியாமணி தற்போது ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை பிரியாமணி  சினிமா துறைக்குள் வந்த ஆரம்ப காலகட்டத்தில் தனக்கு பிடிக்காத வேலையை செய்ய கூறி சிலர் தொந்தரவு செய்ததாக அவர் கூறியுள்ளார்.

Priyamani

இதுகுறித்து பிரியாமணி பேட்டி ஒன்றில் கூறியதாவது, நான் நடித்துக் கொண்டிருந்த படம் பாதி முடிந்தது. அந்த சமயத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் என்னை அணுகி எனது தொப்புள் அருகே பச்சை குத்திக்கொள்ள கூறினார். அதில் எனக்கு விருப்பமில்லை.

இதுகுறித்து நான் அவரிடம் கூறியும் அவர் தொடர்ந்து என்னை வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் நான் அதை செய்தேன். சினிமாவுலகில் ஹீரோயின்கள் தங்களுக்கு பிடிக்காத வேலையை செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது என கூறியுள்ளார்.