அருமை பெண் கல்விக்காக மாரத்தானில் ஓடும் பிரபல தமிழ் நடிகை; குவியும் பாராட்டு.!

அருமை பெண் கல்விக்காக மாரத்தானில் ஓடும் பிரபல தமிழ் நடிகை; குவியும் பாராட்டு.!


priyamani---women-education---maraththan---bangalur

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரியாமணி. 2007 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியுடன் இணைந்து இவர் நடித்த பருத்திவீரன் என்ற படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதில் முத்தழகு என்ற இவரின் கேரக்டரை இன்றளவும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இப்படத்தில் நடித்ததன் மூலம் பிலிம்பேர் விருது மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

Priyamani

தமிழை தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு தனது காதலர் முஷ்தபா ராஜை திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் குடியேறியுள்ளார். தற்சமயம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.

இதனிடையே, மாதவிலக்கு, சுகாதாரம் ஆகிய காரணங்களால் மாணவிகள் படிப்பைப் பாதியில் விடும் சூழல் இன்றும் நிலவி வருவதால் 'பள்ளியில் இருங்கள்' என்ற பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்நிலையில், வரும் மே மாதம் 19ம் தேதி பெங்களூருவில் நடக்கும் மாராத்தான் போட்டியில் கலந்து கொண்டு பெண் கல்விக்காக நிதி திரட்ட இருக்கிறார்.



 

இது குறித்து அவர் கூறுகையில், பெரும்பாலான பள்ளிகளில் சரியான டாய்லெட் வசதி இல்லாதது, மாதவிலக்கு சுகாதார சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் மாணவிகள் தங்களது படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுவது வழக்கமாகி வருகிறது. ஒரு பெண்ணாக இந்த விஷயத்தில் பணியாற்றுவது என் கடமை. அதனால், இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு என்னால் ஆன சிறிய நிதியுதவி திரட்ட முன்வந்துள்ளேன். இது போன்று பலரும் தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.