சினிமா

பிரியா பவானிஷங்கருக்கு இப்படியொரு சோதனையா? அம்பலமான திருட்டுத்தனத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

priyabavani shankar tweet to fake profile

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். இளைஞர்களையும் டிவி சீரியல் பார்க்க வைத்ததில் அம்மணிக்கு முக்கிய பங்கு உண்டு. இவருக்காகவே அந்த சீரியலை பார்த்த இளைஞர்கள் ஏராளம்.

ஒருகட்டத்தில் புகழின் உச்சிக்கு சென்ற ப்ரியா தான் நடித்த டிவி சீரியலை விட்டுவிட்டு வெள்ளித்திரை பக்கம் சென்றார். மேயாத மான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.

அதை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்குக்கு அக்கா பொன்னாக நடித்திருந்தார். இவரது நடிப்பில் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர், அதர்வாவிற்கு ஜோடியாக குருதி ஆட்டம் போன்ற படங்கள் வெளிவர உள்ளன.

பிரியா பவானி சங்கர் பெயரில் ட்விட்டரில் பல போலி அக்கவுண்ட்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது பெயரில் உள்ள அக்கவுண்ட் ஒன்றில் இருந்து, மான்ஸ்டர் படம் அனைவருக்கும் பிடித்துள்ளது என்று நம்புகிறேன். உங்களது பாராட்டுகளுக்கு நன்றி என்று பதிவு செய்யப்பட்டது.

இதனை கண்ட பிரியா பவானி சங்கர் இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், எதையாவது பதிவு செய்துகொண்டே இருக்கவேண்டும் என்று உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும், பொறுப்பையும் நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் மணிக்கொரு முறை பதிவுகளை வெளியிட்டு என்னை சங்கடப்படுத்துவதை உங்கள் வேலையாக வைத்துக்கொள்ளாதீர்கள். நன்றி ஆனால் நன்றி இல்லை ’ என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். 

நடிகை பிரியா பவானிஷங்கருக்கு இப்படியொரு இம்சையா? அம்பலமான திருட்டுத்தனத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!


Advertisement