இணையத்தில் செம்ம வைரலாகும் ப்ரியா பவானி ஷங்கரின் ஜிம் வீடியோ. இதோ! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

இணையத்தில் செம்ம வைரலாகும் ப்ரியா பவானி ஷங்கரின் ஜிம் வீடியோ. இதோ!

விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். அந்த வகையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். இவருக்காகவே இந்த சீரியலை பார்த்த இளைஞர்கள் ஏராளம்.

சின்னத்திரையில் கிடைத்த புகழை வைத்து வெள்ளி திரைக்கு சென்ற இவர் வைபவுக்கு ஜோடியாக மேயாத மான் படத்திலும், கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறு கதாபாத்திரத்திலும், SJ சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் பிஸியாகவும் நடித்துவருகிறார் ப்ரியா பவானி ஷங்கர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ. 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo