சினிமா

அஜித்தின் இந்த படம் பிரபல நடிகைக்கு மிகவும் பிடித்த படமாம்! எந்தபடம்? யார் தெரியுமா?

Summary:

Priya bavani shankar likes ajith mugavari moive

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். இளைஞர்களையும் டிவி சீரியல் பார்க்க வைத்ததில் அம்மணிக்கு முக்கிய பங்கு உண்டு. இவருக்காகவே அந்த சீரியலை பார்த்த இளைஞர்கள் ஏராளம்.

ஒருகட்டத்தில் புகழின் உச்சிக்கு சென்ற ப்ரியா தான் நடித்த டிவி சீரியலை விட்டுவிட்டு வெள்ளித்திரை பக்கம் சென்றார். மேயாத மான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.

மேலும் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரியா நடித்திருப்பார். இந்நிலையில் பேட்டி ஒன்றிற்கு பதில் அளித்த அவர் அவருக்கு பிடித்தது பிடிக்காதது என அனைத்தையும் பற்றி பேசினார். மேலும் அனைவரிடமும் கேட்கப்படும் தலயா? தளபதியா? கேள்வியும் அவரிடம் கேட்கப்பட்டது.

எனக்கு இருவரையுமே பிடிக்கும். இருவரது படங்களையும் விரும்பி பார்ப்பேன். அதிலும் அஜித் சாரின் முகவரி படத்தை நிறைய தடவை பார்த்திருக்கிறேன். இதுவரை அந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன் என எனக்கே தெரியவில்லை என்று பதில் அளித்துள்ளார் பிரியா.


Advertisement