சர்ச்சை படத்தில் நடிக்கவுள்ளார் பிரபல நடிகை ப்ரியா ஆனந்த்! எந்த படம் தெரியுமா?

சர்ச்சை படத்தில் நடிக்கவுள்ளார் பிரபல நடிகை ப்ரியா ஆனந்த்! எந்த படம் தெரியுமா?


Priya anandh casting arjun reddy tamil remake movie

கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். முதல் படம் சொல்லும் அளவிற்கு ஓடாததால் பிரியா அனைத்திற்கும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து புகைப்படம், லீடர் போன்ற ஒருசில படங்களில் நடித்தார் ப்ரியா ஆனந்த்.

Priya anand

ஆனலும், தமிழ் சினிமாவில் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பிரியா ஆனந்திற்கு கிடைத்தது. இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றதால் பிரியா ஆனந்தும் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.

அதனை தொடர்ந்து நடிகர் சிவா நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை படத்திலும் நாயகியாக நடித்தார் ப்ரியா ஆனந்த். தற்போது ஆர். ஜே பாலாஜி நடித்திருக்கும் LKG படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ப்ரியா ஆனந்த்.

இந்நிலையில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற அருஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் படத்தில் நடிக்கவுள்ளார் ப்ரியா ஆனந்த். இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி இன்றுதான் படத்தின் பெயர், புதிய படக்குழு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது பட தயாரிப்பு நிறுவனம்.