BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
வாயில் சிகரெட், கையில் சரக்கு பாட்டில்... வேற லெவலில் வைரலாகும் பிரேம்ஜியின் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து நடிகராகவும் இசையமைப்பாளராக வலம் வருபவர் பிரேம்ஜி. இவர் தனது சகோதரரும் இயக்குனருமான வெங்கட்பிரபுவின் பெரும்பாலான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ரசிக்கும்படி எதார்த்தமாக இருக்கும்.
இந்த நிலையில் தற்போது பிரேம்ஜி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் போஸ்டர் வெளியாகி செம ட்ரெண்டாகி வருகிறது. ஜஸ்வந்த் சூப்பர் சினிமாஸ் சார்பில் கே.பிச்சாண்டி தயாரித்துள்ள படம் ‘தமிழ் ராக்கர்ஸ். பரணி ஜெயபால் இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரேம்ஜி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவரே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் கங்கை அமரன் இப்படத்திற்கு பாடல்களை எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் பிரேம்ஜி வாயில் சிகரெட், கையில் சரக்கு பாட்டிலுடன் உள்ளார். அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.