காதல் கணவரை விவாகரத்து செய்கிறாரா சினேகா! தீயாய் பரவும் தகவல்! உண்மையை உடைத்த பிரபலம்!!prasanna-ending-the-rumour-about-divorce-with-wife-sneg

90ஸ் காலகட்டங்களில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. புன்னகை இளவரசி என அழைக்கப்பட்ட இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த சினேகா  கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் இடையில் சில காலங்கள் சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்த சினேகா தற்போது மீண்டும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் பிரசன்னாவும் சில படங்களில் வில்லனாகவும், ஹீரோவாகவும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் 10 ஆண்டுகளாக சிறந்த நட்சத்திர ஜோடிகளாக விளங்கி வரும் சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக அண்மைகாலமாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில், "முழுமுற்றும் புரளியே! இறையருளால் மகிழ்வான இல்வாழ்வும் முத்தான மக்களும் பெற்று இணைந்திருக்கிறோம். இணைந்தேயிருப்போம்..." என பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.