நீங்களாச்சு, உங்க பிக்பாஸாச்சு.. பெரிய கும்பிடு போட்டு எஸ்கேப்பான பிரதீப்! அட.. எங்க, எதுக்காக போறாரு தெரியுமா??

நீங்களாச்சு, உங்க பிக்பாஸாச்சு.. பெரிய கும்பிடு போட்டு எஸ்கேப்பான பிரதீப்! அட.. எங்க, எதுக்காக போறாரு தெரியுமா??


pradeep went goa viral post

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் பிரதீப் ஆண்டனி. இவர் தனது தனித்துவமான விளையாட்டால் மற்றும் செயலால் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். பிரதீப் நிகழ்ச்சியில் இறுதிவரை சென்று டைட்டில் செல்வர் என பலரும் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் அதற்கு எதிர்மாறாக அவர் தரக்குறைவாக, தவறான வார்த்தைகளை பேசுகிறார், இரவு தூங்கவே பயமாக இருக்கிறது, அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தொடர்ந்து சில சக போட்டியாளர்கள் குற்றசாட்டுகளை வைத்த நிலையில், அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது நியாயமற்ற வெளியேற்றம் எனவும் விமர்சனம் செய்தனர்.

மேலும் பிரதீப்பை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வரவழைக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என கடந்த எபிசோடுகளில் கமல் விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில் பிரதீப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ஜாலியா இருந்துச்சு.. 4,5 தயாரிப்பாளர்கள் என்னை நம்பி கதை கேக்குறாங்க. நான் IFFI கோவா 2024 கிளம்புறேன். நாலு பாரின் படம் பார்த்து, திருடி ஒரு நல்ல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி படத்தோட வரேன். ஆள விடுங்க நீங்களாச்சு, பிக்பாஸ் ஆச்சு.. போயிட்டு வரேன், நல்லா இருங்க.. என பதிவிட்டுள்ளார்.