எனக்கு அதனால்தான் இன்னும் கல்யாணம் ஆகலை! மனம் திறந்து போட்டுடைத்த பாகுபலி நாயகன்!!

எனக்கு அதனால்தான் இன்னும் கல்யாணம் ஆகலை! மனம் திறந்து போட்டுடைத்த பாகுபலி நாயகன்!!


prabhas-talk-about-not-get-marriage-WQJA42

தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் பிரபாஸ். இவர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து  சூப்பர்ஹிட்டான பாகுபலி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் இந்தியளவில் பிரபலமானார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

பிரபாஸ் தற்போது ராதே ஷியாம் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் மார்ச் 11ம் தேதி இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் படம் ப்ரமோஷன் பணிகளில் பிரபாஸ் ஈடுபட்டு வருகிறார்.

Prabhas

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.  அப்பொழுது நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரபாஸிடம், ராதே ஷ்யாமில் கைரேகை நிபுணராக நடித்துள்ளீர்கள், ஆனால் டிரெய்லரில் வரும் டயலாக்கில் காதல் பற்றிய கணிப்பு சரியாக இருந்ததில்லை என கூறியிருக்கிறீர்கள். நிஜத்தில் காதல் பற்றிய உங்களது கணிப்பு என்ன என கேட்டுள்ளார். அதற்கு அவர், உண்மையை சொல்ல போனால், நிஜத்திலும் காதல் தொடர்பான எனது கணிப்புகள் எப்போதும் தவறாகவே இருந்துள்ளது. அதனால்தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என ஜாலியாக கூறியுள்ளார்.