பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது மட்டும் தான் இருக்கிறது.! கடுமையாக விமர்சித்த பிரபல நடிகை.!
அடேங்கப்பா!!! இந்த ஒரு படத்தில் நடிக்க பிரபாஸ்க்கு சம்பளம் இவ்வளவா? தலைசுற்றி போன ரசிகர்கள்!
அடேங்கப்பா!!! இந்த ஒரு படத்தில் நடிக்க பிரபாஸ்க்கு சம்பளம் இவ்வளவா? தலைசுற்றி போன ரசிகர்கள்!

இந்திய சினிமாவில் முக்கிய திரையுலக பிரபலமாக கருதப்படுபவர் பிரபாஸ். மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பாகுபலி திரைப்படத்தின் கதாநாயகர் ஆவார். இப்படத்தின் மூலமே இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உருவானது மேலும் இவர் இளம்பெண்களின் கனவுக் கண்ணனாக கொடிகட்டிப் பறக்கத் துவங்கினார்
இப்படத்தை தொடர்ந்து அவர் மெகா பட்ஜெட் படமான சாஹோவில் நடித்தார். ஆனால் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவான இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெற்று தரவில்லை. அப்படத்தை தொடர்ந்து அவர் தற்போது கேகே ராதாகிருஷ்ணா இயக்கத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தையும் தொடர்ந்து பிரபாஸ் சாவித்திரியின் வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாக்கவுள்ள அப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகவுள்ளது.
400 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இந்தப் படத்துக்கு பிரபாஸ் சம்பளமாக ரூ.70 கோடி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படப்பிடிப்பை 12 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் எனவும், அதைவிட தாண்டினால் அதற்கு தனி சம்பளம் தரவேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதனை படகுழு ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.