பாகுபலி நடிகரின் 'ராதே ஷ்யாம்' ரிலீஸ்! எப்போ தெரியுமா? படக்குழு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். அவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானார். பல மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் பிரபாஸ் தற்போது ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக, ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளிலும் உருவாகியுள்ள இப்படம் ஜனவரி 14-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பரவி வரும் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக படம் ரிலீஸாவது தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் வரும் மார்ச் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் பாகுபலி நடிகரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
We are delighted to be associated with @RedGiantMovies_ for presenting #RadheShyam in Tamil Nadu.@Udhaystalin#Prabhas @hegdepooja @director_radhaa @UV_Creations@TSeries @GopiKrishnaMvs #RadheShyamOnMarch11 pic.twitter.com/U0llEgjHOw
— Radhe Shyam (@RadheShyamFilm) February 3, 2022